
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாள படமான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் மறு ஆக்கமான இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் சாமி, “தனி ஒருவன் மாதிரியான ரோல்கள் நிறைய வந்தன. நான் மறுத்துவிட்டேன்.” என்று தெரிவித்தார்.
மேலும். “டுவிட்டர் கருத்துக்களை பார்த்து அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்களா?, நிச்சயம் வர மாட்டேன். மக்களை பாதிக்கும் விஷயங்கள் வரும் போது ஒரு சராசரி மனிதனாக என் கருத்தை பதிவிடுகிறேன் அவ்வளவு தான். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறினார்.
அத்துடன், “எனக்கு பிடிக்காத படம் ஹாரர். அந்த மாதிரி படங்களை பார்க்கவும் மாட்டேன், நடிக்கவும் மாட்டேன். ஹீரோவோ, வில்லனோ, தனி ஹீரோவா, நிறைய ஹீரோக்களோ... எனது ரோல் சிறப்பாக இருந்தால் நடிப்பேன்.” என்றும் தெரிவித்தார்.