மத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு
Posted: Fri,27 Apr 2018 11:21:28 GMT
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு தாமதம் செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.
இது தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)