குட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை
Posted: Fri,27 Apr 2018 11:13:59 GMT
குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கயில், “குட்கா விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழல், லஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, சட்டப்படியான நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாதந்தோறும், லஞ்சம் பெற்றதாக, குட்கா முதலாளிகளின் டைரியில் இடம்பெற்றுள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும்பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)