மோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்
Posted: Fri,27 Apr 2018 11:13:20 GMT
கர்நாடக மாநில சட்டமன்றா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மங்களூரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ளதை நிறைவேற்றுவோம். கடந்த அறிக்கையில் கூறப்பட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5 வருட ஆட்சியில் நாங்கள் உறுதியளித்த விஷயங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்ட 3 அல்லது 4 பேர் மட்டுமே முடிவு செய்வார்கள். அதில் பொய்கள் மறைக்கப்பட்டிருக்கும். ரெட்டி சகோதரர்களின் கொள்கைகள் மறைக்கப்பட்டிருக்கும். கர்நாடக மக்களின் குரலாக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரலாக இருக்கும். மோடியும், பா.ஜ.,வும் தாங்கள் சொன்னதில் உறுதியாக இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்தின் குரல்கள் மதிப்பு மற்றும் மரியாதை இல்லாமல், இருந்தால் வளர்ச்சியடையாது. கர்நாடக மக்களுக்கு என்ன தேவை என அவர்களிடம் கேட்டுள்ளோம். எங்களின் அறிக்கை கர்நாடக மக்களின் மன் கி பாத் ஆக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.