கோலியின் வேண்டுகோள்
Posted: Fri,27 Apr 2018 11:12:04 GMT
தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலி நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் ஒரு கோரிகை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ஒருநாளைக்கு சாலை விபத்தில் 19 பேர் வீதம் மதுபானம் அருந்தி கொண்டு வாகனம் ஓட்டுவதால் மரணம் அடைகின்றனர். ஒரு வருடத்திற்கு இதனால் 6700 பேர் வீதமாக எண்ணிக்கை உயர்கிறது. அதனால் இனிமேல் நான் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்ட போவதில்லை.
என்னுடன் நீங்களும் கைகோருங்கள்'' என்று பொதுமக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)