மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா
Posted: Thu,26 Apr 2018 05:27:07 GMT
கௌதம் கார்த்திக் மற்றும் அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் திரு இயக்கத்தில் தயாராகிவரும் படம் மிஸ்டர் சந்திரமௌலி. கௌதம் கார்திக் ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சாம் சி.எஸ் இசையில் நடிகர் சூர்யாவின் தங்கையும், சிவக்குமாரின் மகளுமான பிருந்தா பாடல் பாடியுள்ளார். நேற்று நடந்த இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, தன் தங்கையை பாடவைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவில் பேசிய சூர்யா, “கார்த்திக் சார் படம் பார்த்துத்தான் லவ்னா இப்படித்தான் இருக்குமோ, லவ் இப்படித்தான் பண்ணணுமோ அப்படிங்குற மாதிரி ஐடியா கிடைச்சது. 'மௌனராகம்' படத்தில் கார்த்திக் சார் சொல்ற இந்த 'மிஸ்டர்.சந்திரமௌலி' பெயரை டைட்டிலா பார்க்கும்போது 86 நினைவுகள்லாம் வந்துடுச்சு.
என் தங்கச்சி பிருந்தாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு நாங்க நினைச்சு பார்க்கவே இல்ல. எங்களுக்கும் இப்படித்தான் நடந்திருக்கு. ஒவ்வொரு வாட்டியும், ஃபேமிலியோட பின்னணியில் இல்லாம தான் நாங்க எல்லோரும் சினிமாவுக்குள்ள வந்திருக்கோம். வசந்த் சார் வந்து கேட்டதால மட்டுமே நான் இப்போ நடிகரா இருக்கேன். ஞானவேல்ராஜா வந்து கார்த்தி நடிச்சே ஆகணும்னு கேட்டதால் தான் கார்த்தி நடிக்க வந்தாப்ள. பாடகியாகணும்ங்கிறது பிருந்தாவோட சின்ன வயசு ஆசை. இவ்ளோ பெரிய ஸ்டேஜ்ல பிருந்தாவுக்காக நேரம் ஒதுக்கி முக்கியமான அறிமுகம் கொடுத்த தனஞ்செயன், திரு, சாம் சி.எஸ் எல்லோருக்கும் நன்றி. கார்த்திக் சார் செட்ல இருந்தா யாருக்கும் எனர்ஜி டவுனே ஆகாது. அவர் உள்ள வரும்போதே டார்லிங் குட் மார்னிங்னு சொல்லிட்டு வருவார். ஒருத்தர் விடாம எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்வார். அவர் கூட வொர்க் பண்ணினது ஒரு மேஜிக். இந்தப் படம் நல்ல வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.
  • 0 comment(s)
Be the first person to like this.