வேலை நிறுத்தத்தின் வெற்றி குறித்து விஷால் பேச்சு
Posted: Thu,26 Apr 2018 05:26:18 GMT
தயாரிப்பாளார் சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் குறித்தும், அதன் வெற்றி குறித்தும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியுள்ளார். மிஸ்டர் சந்திரமௌலி படத்த்ன் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வேலை நிறுத்தம் குறித்து கூறும்போது, “தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்.
48 நாள் வேலைநிறுத்தம்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல. இந்த வெற்றி என்னோடது இல்ல. தயாரிப்பாளர் சங்கம் மூலமா நாம பண்ணின முயற்சிகள் வழியாக இந்திய சினிமா உலகே தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செஞ்சிருக்கோம். ஒண்ணு தியேட்டர்காரங்க சம்பாதிக்கணும். இல்ல படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும். ரெண்டு பேருக்கும் இடையில் வெளியாள் வந்து ஆட்டையைப் போட்டு சம்பாதிச்சுட்டு இருக்காங்க. அந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் சும்மா இருக்கமுடியாது. அதுக்காக போராடியே ஆகணும்.
எல்லோரும் சேர்ந்து போராடினோம். இப்போ படங்கள் ரிலீஸ் ஆக ஆரம்பிச்சிருக்கு. இப்போதைக்கு ஜூன் கடைசி வரைக்கும் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு பட்டியல் தயாரிச்சிருக்கோம். உங்க எல்லோருடைய பங்களிப்பின் மூலமாக அடுத்த ஆறு மாசத்துக்குள்ள இந்திய சினிமாத்துறைக்கே மிகச்சிறந்த முன்னுதாரணமா தமிழ் சினிமா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.