பெங்களூரை துவம்சம் செய்த சென்னை
Posted: Thu,26 Apr 2018 12:41:48 GMT
நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரை அடித்து துவைத்து காயப்போட்டுள்ளது சென்னை. நேற்று நடைபெற்ற போட்டியில் பூவா தலையா வென்ற சென்னை அணித்தலைவர் தோணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய பெங்களூர் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. 20-20 போட்டிகளை பொறுத்தவரை 200க்கும் அதிகமான இலக்கு என்பது இமாலய இலக்குதான். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியக ஆடியது.
அணித்தலைவர் தோணி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரின் அதிரடியால் பெங்களூரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது சென்னை. அணித்தலைவர் தோணி 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்து, அதிரடி வெற்றியை பெற்றது.
  • Share
  • 0 Comment(s)