மோடி பேச்சை மீறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்
Posted: Thu,26 Apr 2018 12:40:13 GMT
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சூர்ப்பனகை என்று தெரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திரா சிங் பைரியா தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ராமாயணத்தில், ராவணன் தங்கை சூர்ப்பனகை, தற்போது, மேற்கு வங்க மாநிலத்தின் சூர்ப்பனகையாக மாறி உள்ளார்; அவர் தான், முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில், ஹிந்துக்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகின்றனர்; இதை தடுக்க, மம்தா பானர்ஜி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இங்கு, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மேற்கு வங்கமும், ஜம்மு - காஷ்மீர் போல் மாறிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் முன்பாக பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி சர்ச்சையை ஏற்படுத்துவது போல் பேசக்கூடாது என்று மோடி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)