இன்னும் சில நாட்களில் மய்யம் விசில் ஒலிக்கும்
Posted: Thu,26 Apr 2018 12:39:01 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே, மக்களின் குறைகளை களைவதற்கும், ஊழலை ஒழிப்பதற்குமாக மய்யம் விசில் என்ற செயலியை தொடங்குவது குறித்து அறிவித்திருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் வரும் 30 தேதி முதல் மய்யம் விசில் செயலி அறிமுகமாக உள்ளது. இது குறித்து காணொளி வெளியிட்டுள்ள கமல்ஹாசன், அதில், “ காற்றை கெடுத்தார்கள், ஆற்றையும் கெடுத்தார்கள். தண்ணீர் ஓடினால் அது வெறும் ஆறு, சாயம் மட்டும் ஓடினால் அது சாக்கடை. வண்டி ஓட வேண்டிய இடத்தில் மழை தண்ணீர் ஓடுகிறது, மரம் இருக்க வேண்டிய இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற ஆயிரம் பிரச்னைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் முதல் காரணம் யார் தெரியுமா, நம்மை சுற்றி என்ன நடந்தாலும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நாம் தான். இனி எந்த பிரச்னையையும் பார்த்து, பயந்து, ஒதுங்கி இருக்க வேண்டாம். ஏனென்றால் இனி உங்கள் கையில் விசில் இருக்கிறது. போனை எடுங்கள் மையம் விசில் ஆப்பை டிவுன்லோடு செய்யுங்கள். உங்களை பாதிக்கும் பிரச்னைகளை பதிவு செய்யுங்கள். விசில், அது எப்படி கேட்காமல் போகும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.