2.0 ஐ முந்திய காலா
Posted: Thu,26 Apr 2018 10:40:32 GMT
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள படம் காலா, கபாலி படத்தையடுத்து இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஈஸ்வரி ராவ், ஹியூமா குரோஷி, சமுத்திர கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
75 கோடி செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தின் திரையரங்க உரிமையை 125 கோடிகளுக்கு வாங்கியுள்ளது லைகா நிறுவனம். இதன் மூலம் , திரையரங்க உரிமையில் மட்டும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துக்கு 50 கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது. இதற்கு மேல் விற்பனையாகும் அனைத்து உரிமைகளும் லாப கணக்கில்தான் சேர உள்ளது.
இந்நிலையில் காலா படத்தின் செயற்கை கோள் உரிமையை 75 கோடிகளுக்கு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 400 கோடி செலவில் உருவாகி இருக்கும் 2.0 படத்டின் செயற்கை கோள் உரிமை 110 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ள நிலையில், காலா படத்தின் மொத்த செலவு தொகை அளவுக்கு செயற்கை கோள் உரிமை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் டிஜிட்டல் உரிமை உள்ளிட்ட வேறு பல உரிமைகளை விற்பனை செய்யும் போது தனுஷுக்கு 200 கோடி வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
  • Share
  • 0 Comment(s)