அர்ஜுன் ரெட்டி 2ம் பாகம் கதை என்ன?
Posted: Thu,26 Apr 2018 10:39:53 GMT
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, “அர்ஜுன் ரெட்டி’ பார்ட் 2 உருவாகுமா? என விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. “இயக்குநர் சந்தீப்பும் நானும் இதுகுறித்து ஏற்கெனவே பேசிவிட்டோம். 40 வயதில் அர்ஜுன் ரெட்டியின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதுதான் பார்ட் 2-வின் கதையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் பால இயகக்த்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)