விஜய் 62 படத்தின் உண்மையான செலவு எவ்வளவு?
Posted: Thu,26 Apr 2018 10:38:31 GMT
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு தற்காலிகமாக விஜய் 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இபப்டத்தில் பெண் அரசியல்வாதியாக படுபயங்கரமான வில்லி பாத்திரத்தில் நடிக்கிறார் வரு சரத்குமார். மெர்சல் படத்தை தொடர்ந்து இப்படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
100 கோடி செலவில் உருவாகும் இப்படத்தின் செலவு என்னவோ வெறும் 30 கோடிகள் மட்டுமே. இப்படத்தில் விஜய்க்கு 40 கோடிகளும், முருகதாஸுக்கும் 25 கோடிகளும் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு 4 கோடி, கீர்த்தி சுரேஷுக்கு 1 கோடி மற்றும் இதர நட்சத்திரங்களின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் 70 கோடிகளை தாண்டுகிறது.
மீதமிருக்கும் தொலையில்தான் படத்தின் ஒட்டு மொத்த செலவும் வருகிறது. அப்படி பார்த்தால் படத்தின் தரத்தை மதிப்பிட வேண்டும் என்றால் 30 கோடி செலவில் உருவாகும் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
  • 0 comment(s)
Be the first person to like this.