”விசாரணை வளையத்தில் இருந்து, தப்ப முடியாது”, ஸ்டாலின் அறிக்கை
Posted: Wed,25 Apr 2018 12:00:34 GMT
தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக குட்கா விற்பனை செய்யபப்ட்டதில் ஆளும் கட்சியினர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விசாரணையை தாமதப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “'குட்கா' வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கோரி, தி.மு.க., தொடர்ந்த வழக்கு, விசாரணை முடிந்து, தீர்ப்பிற்காக காத்து இருக்கிறது.இந்நேரத்தில், திடீரென அந்த விசாரணை அதிகாரியை மாற்றியுள்ளனர். உயர் நீதி மன்ற மதுரை கிளை, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டு, 'விஜிலென்ஸ்' கமிஷனராக, வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார்.
விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை, ஜனவரி, 8ல் மாற்றியது, அ.தி.மு.க., அரசு.இப்போது, அந்த விஜிலென்ஸ் கமிஷனின் கீழ் இயங்கும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின், கூடுதல், டி.ஜி.பி.,யும் மாற்றப்பட்டுள்ளார். இதில் இருந்து, குட்கா வழக்கு தொடர்பானஅனைத்து விசாரணை களுக்கும், மூடுவிழா நடத்துகிறது, அ.தி.மு.க., அரசு என்பது தெளிவாகியுள்ளது.
எனவே, உயர் நீதிமன்றத்தில், குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, சம்பந்தப்பட்ட கோப்பு களை மறைக்கும், அ.தி.மு.க., அரசு, பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சமயத்தில், இதுபோன்ற மாற்றல்களுக்கு, துணை போகும் உயரதிகாரிகளும், விசாரணை வளையத்தில் இருந்து, நிச்சயம் தப்ப முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)