பஞ்சாயத்துராஜ் தினவிழாவில் மோடி
Posted: Wed,25 Apr 2018 11:58:29 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தினவிழாவில் மோடி கலந்து கொண்டு, கிராம பஞ்சாயத்துக்களை பலப்படுத்தும், ராஷ்ட்ரீய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தையும், பழங்குடியினர் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
அவ்விழாவில் பேசிய அவர், “ மத்திய அரசு,மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து உள்ளது. கிராமங்கள் வளர்ச்சிஅடையும் போதுதான், இந்தியா உண்மையான வளர்ச்சி அடையும் என்பதில், மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார்.
வளர்ச்சிக்காக ஒதுக்கப் பட்ட நிதியை சரியாக பயன்படுத்துவதே, அரசின் நோக்கம். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் வளர்ச்சி அடையச் செய்ய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதை நோக்கி உழைத்து வருகிறோம்.
கிராமப்புற கல்வி வளர்ச்சியிலும், மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை, பஞ்.,அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்விக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பெண் கல்வி வளர்ச்சியில், கிராம பஞ்சாயத்துக்கள் தான் முக்கியபங்காற்ற வேண்டும். கிராமங்களில், ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேகரிக்க வேண்டும். கடந்த காலங்களில், நிதி ஒதுக்கீடு குறித்த தகவல் அறிவதில் சிக்கல் இருந்தது.
தற்போது, திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும், அதை பயன்படுத்தப்படுவது குறித்தும், மக்கள் பேசுகின்றனர். மூங்கில்களை, மரங்களின் வகையிலிருந்து, புற்கள் வகைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயி களுக்கு உதவி செய்யப்படும். அவர்களின் வருமானம் அதிகரிபதுடன், வெளி நாட்டில் இருந்து மூங்கில்கள் இறக்குமதி செய்யப்படுவதும் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)