தீபக் மிஸ்ரா மீதான கண்டன தீர்மானத்தை நிராகத்த வெங்கய்யா நாயுடு
Posted: Wed,25 Apr 2018 11:57:40 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டுவருவதற்கான முன்மொழிவை கொடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடு அத்தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளார்களிடம் தெரிவித்துள்ள வெங்கய்யா நாயுடு, “தலைமை நீதிபதி மீது, கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் பற்றி, சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே, எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல், சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, ராஜ்யசபா தலைவர் அலுவலகம், தபால் நிலையம் அல்ல. சட்ட விதிமுறையை ஆராய்ந்து தான் முடிவு எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)