பாபர் மசூதி இடிப்பில் காங்கிரஸை கட்சியை குற்றம் சாட்டும் சல்மான்
Posted: Wed,25 Apr 2018 11:55:15 GMT
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்சித், பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் கைகளிலும் ரத்தக்கறை படிந்துள்ளது என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் அலிகார் பல்கலை கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “பாபர் மசூதி இடிப்புக்கு பின் நடந்த கலவரங்களில், காங்கிரஸ் கட்சியினர் கைகளிலும், முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஏனென்றால், அப்போது, காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், உங்கள் கரங்களிலும் அதுபோன்ற ரத்தக்கறை இனி படியக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் மட்டுமே பங்கெடுத்தன என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சல்மான் குர்திஷ் இப்படி பேசியுள்ளது காங்கிரஸ் கட்சியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 0 comment(s)
Be the first person to like this.