உள்ளாட்சி தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் உறுதி
Posted: Wed,25 Apr 2018 06:13:08 GMT
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று சென்னையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்.நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம்.
எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்” என்று தெரிவித்தார். அத்துடன், “ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது; முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)