காவிரியை விட மெரினா முக்கியமா? நீதிபதி கேள்வி
Posted: Wed,25 Apr 2018 06:11:08 GMT
தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ” சென்னையை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும், மெரினாவில் நிச்சயம் போராட அனுமதிக்க முடியாது” என்று வாதிட்டார். வழக்கறிஞரின் இந்த வாதத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி ராஜா, “காவிரியைவிட மெரினா கடற்கரை மிகவும் முக்கியமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “வைகுண்டஏகாதேசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் கூடுவார்கள் அந்தப் பண்டிகைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பண்டிகை கொண்டாடக் கூடாது என்று உத்தரவிடுவீர்களா?. மக்களின் போராட்டத்தை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை, போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அனுமிதி உள்ளது என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று வழங்குவதாக ஒத்திவைத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)