இரும்புதிரை வெளியீடு குறித்த செய்திகளை மறுக்கும் விஷால்
Posted: Tue,24 Apr 2018 04:19:25 GMT
விஷால், சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் இரும்புத்திரை. இப்படம் எப்போதோ தொடங்ப்பட்டாலும், விஷாலின் தயாரிப்பாளர் சங்க தேர்தல், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷாலின் சிறு பங்கேற்பு உள்ளிட்ட பல விசயங்களால் படப்பிடிப்பு இடையூறு ஏற்பட்டதால் தாமதமாகவே தயாரானது. அதன் பிறகு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தால் இப்படத்தின் வெளியீடும் தள்ளிப்போனது.
தற்போது வேலை நிறுத்தம் முடிந்துள்ள நிலையில் வரும் மே 11ம் தேதி இரும்புத்திரை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இச்செய்தியை விஷால் மறுத்துள்ளார்.
இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'இரும்புத்திரை' ரிலீஸில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவேண்டியது எனது கடமை. படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)