மோடிக்கு எதுபற்றியும் கவலையில்லை: ராகுல் குற்றச்சாட்டு
Posted: Tue,24 Apr 2018 01:43:29 GMT
'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத் திட்டத்தை, காங்கிரஸ் தலைவர், ராகுல் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “நாடு, பற்றி எரிந்தாலும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித்துகள் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டாலும், அது பற்றி, பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படுவதாக தெரியவில்லை. மீண்டும் பிரதமர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதில் தான், மோடி உறுதியாக உள்ளார்.மோடியின் ஆட்சியில், அரசியலமைப்பு சட்ட மாண்புகள் அபாய கட்டத்தில் உள்ளன. இந்த நிலை தொடர்வதை, காங்., ஒருபோதும் அனுமதிக்காது. உச்ச நீதிமன்றத்தை இயங்க விடாமல், மத்திய அரசு தடுக்கிறது. பார்லிமென்டை, மத்திய அரசு முடக்கிவைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில், நிரவ் மோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நான், 15 நிமிடங்கள் பேசினால் போதும்; பிரதமர் மோடி, அங்கிருந்து உடனே ஓட்டம் பிடிப்பார். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையில் முழு நம்பிக்கை உள்ள நபர்களால், மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலின்போது, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அள்ளி வீசினார். அவை எதையும், அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில், மேலும் புதிய பல வாக்குறுதிகளை, அவர்அள்ளி வீசுவார்.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)