கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது: ஜெயக்குமார் பேட்டி
Posted: Tue,24 Apr 2018 01:41:41 GMT
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்ரு வெளியான கட்டுரையால் அதிமுக பாஜக கூட்டணி ஏற்படும் என்று யூகங்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கட்சி நாளிதழில், யார் வேண்டுமானாலும் கட்டுரைஎழுதலாம். ஒரு கட்டுரையாளர், கூட்டணியை முடிவு செய்ய முடியாது. எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நமது மாநிலத்தின் நலன் காக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து , அனைத்து திட்டங்களுக்கும், நிதியை பெறுகிறோம். இது ஒரு நிலைப்பாடு.
அரசியல் ரீதியான இணக்கத்தை, தனிப்பட்ட முறையில், யாரும் முடிவு செய்ய முடியாது; கட்சி தான் முடிவெடுக்கும். உரிய நேரத்தில், கட்சி அறிவிப்பு வெளியிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், கூட்டணி கிடையாது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி முடிவு செய்ய, தற்போது, சரியான நேரம் இல்லை. தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக செயல்படுவோர் உடன், கூட்டணி வைக்க முடியாது. அதை நிர்ணயம் செய்வது, கட்சிதான்”என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)