மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்: ஸ்டாலின் பேச்சு
Posted: Tue,24 Apr 2018 01:40:43 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழக எதிர்கட்சியான திமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இனியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு சுணக்கம் காட்டினால் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்வெற்றிகரமாக நடந்தது. இது மனித சங்கிலி மட்டுமின்றி, மக்களின் உணர்வை வெளிப்படுத்தகூடிய உரிமை சங்கிலியாக வெற்றிகரமாக நடந்தது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மோலண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசு சுணக்கம் காட்டினால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)