வெயிலின் கொடுமையை குறைக்குமா மழை
Posted: Tue,24 Apr 2018 12:52:29 GMT
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கடந்த சில நாடகளாக அதிகரித்து வரும் சூரிய வெப்பம் நேற்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சதமடித்துள்ளது. வேலூர், திருப்பூர், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம், திண்டுக்கல்லில் 108 டிகிரியாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ந்து வருகிறது. இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதாவது, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கோவை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், விருதுநகர், திருப்பூர் போன்ற ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில் கடல் சீற்றம் இன்னும் கட்டுக்குள் வராததால், மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • 0 comment(s)
Be the first person to like this.