Posted: Mon,23 Apr 2018 05:12:10 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபில் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. பூவா தலையா வென்ற ஐதராபாத் அணித்தலைவர் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய சென்னை அணி வாட்சன், டுபிளசி ஜோடி மந்தமான தொடக்கத்தையே கொடுத்தது. அதன் பிறகு சற்றே சூடுபிடித்த ஆட்டத்தின் இறுதியில் அணித்தலைவர் தோனி அதிரடியாக ஆடினார். ஆட்ட முடிவில் சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, சென்னை அணிக்கு கடுமையான போட்டியை கொடுத்தது. இறுதிவரை கடுமையாக போராடிய ஐதராபத் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் வீழ்ந்தது.
  • 0 Comment(s)
Be the first person to like this