காவலர் மீதான தாக்குகல்: சிம்பு கண்டனம்
Posted: Sat,21 Apr 2018 02:45:59 GMT
ஐபிஎல் போட்டிகு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் சிம்பு.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, இப்பிரச்சினை குறித்து பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எனது வணக்கம். சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு போராட்டம் நடத்துவதற்காக நாங்கள்
காவிரி போராட்டம் நடத்திய அனைவரையும் போலீஸார் கைது செய்து விடுதலை செய்தனர். அதற்கு முன்னதாக சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை விடுவிக்காமல் அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு மன்சூர் அலிகான் வந்து போராட்டம் நடத்தியதால் அவரை தற்போது கைது செய்து வைத்துள்ளனர்.
எந்த அடிப்படையில் மன்சூரை கைது செய்தது எதற்கு என தெரியவில்லை. போலீஸார் அவர் கடமையை செய்கின்றனர். நாம் போலீஸாருக்கு எதிரானவர்கள் கிடையாது. ஐபிஎல் போராட்டத்தின் போது நடந்த பிரச்சினையை வன்முறை என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால் காக்கி சீருடை அணிந்திருக்கும் நம்மை பாதுகாக்கும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் அதற்கு முன்னாடி என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸார் நினைத்திருந்தால் தாக்குதல் நடத்திய நபரை எப்படி வேண்டுமானாலும் தாக்கியிருக்கலாம். ஆனால் அந்த நபர் காவிரி உரிமைக்காக போராடுகிறார் என்பதே உணர்ந்தே அந்த போலீஸ்காரர் அடி வாங்கியுள்ளார் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.