”கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்”, விஷால் பதிவு
Posted: Sat,21 Apr 2018 02:45:20 GMT
பெண் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷால், “இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
பத்திரிக்கை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவர்களின் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன், ஒரு நடிகனாக இல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.