Posted: Sat,21 Apr 2018 02:00:28 GMT
நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. வாட்சன், 51வது பந்தில் சதம் எட்டினார். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அடுத்து களமிறங்கிய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவரில் 140 ரன்களுக்கு அட்டமிழந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்கிறது.
  • 0 Comment(s)
Be the first person to like this