பணபற்றாக்குறை குறித்து அருண் ஜேட்லி விளக்கம்
Posted: Tue,17 Apr 2018 12:05:42 GMT
கடந்த சில நாட்களாக ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்ற செய்தியால் மக்க்கள் குழம்பிப்போய் உள்ளனர். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவில் பணப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “நாடு முழுவதும் பணம் விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தேவைக்கு அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்து வருகிறது. அதே போல் வங்கிகளில் பணம் இருக்கிறது. இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகம்தான். சில பகுதிகளில் பணத்தேவை அதிகரித்ததால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.