Posted: Tue,17 Apr 2018 11:51:58 GMT
திடீரென பணம் வழங்கும் ஏடிஎம் மெசின்களில் பணத்தட்டுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பணப் பற்றாக்குறைக்கு காரணம் என்று நிதி ஆலோசகர்கள் காரணங்களை அடுக்கியுள்ளனர். அவை இங்கே:
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.
பல வட மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் டெபாசிட் செய்யும் அளவை விட அதிகமாக உள்ளது. 2018 மார்ச் நிலவரப்படி, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அதுவே 2016-17ம் நிதியாண்டின் இக்காலகட்டத்தில் 15.3 சதவீதமாக இருந்தது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.2000 போன்ற நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ஏடிஎம்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும் என்ற முன்யோசனையின்றி தேவையற்ற பகுதிகளில் அதிக பணமும் தேவையுள்ள பகுதிகளில் குறைந்த பணமும் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் அச்சம் காரணமாக, வங்கிகளில் டெபாசிட் செய்வதை குறைத்துக்கொண்டு கையில் அதிக ரொக்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஏடிஎம்களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகார் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this