மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
Posted: Tue,17 Apr 2018 11:49:24 GMT
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மோடிக்கு, தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “காவிரி உரிமையை தமிழக அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். காவிரி விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்காமல், உடனடியாக காவிரி வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலரை கண்டிக்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)