உதட்டு முத்தம் குறித்து சமந்தா விளக்கம்
Posted: Tue,17 Apr 2018 11:12:20 GMT
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ரங்கஸ்தலம். இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியாளர் சந்திப்பு ஐதரபாத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில், சமந்தாவிடம் “ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரணுக்கு உதட்டு முத்தம் கொடுத்தது கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சமந்தா, “திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்று செய்தியாளர்களுக்கு எதிர் கேள்வி எழுப்பினார்”, மேலும், “நான் ராம் சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்ற ரகசியத்தையும் கூறினார்.
  • Share
  • 0 Comment(s)