சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரகனி
Posted: Tue,17 Apr 2018 11:07:17 GMT
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடிப்பில் தயாராகிவரும் ‘கண்ணே கலைமானே’ படம் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார் சீனு ராமசாமி.
தன்னுடைய அடுத்த படத்தில் சமுத்திரகனியை நாயகனாக நடிக்க வைக்க உள்ளார் சீனுராமசாமி. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடைவெளி எடுத்துக்கொள்வது தேவையில்லாத காலவிரயம் என்று நினைபவர் சீனு ராமசாமி. இதன் காரணமாக ஒரு படம் முடிந்து, வெளியாவதற்கு முன்பே அடுத்த படத்தின் கதை விவாதத்தை தொடங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)