காலா படம் மேலும் இரண்டு மாதங்கள் தள்ளி வைப்பு
Posted: Tue,17 Apr 2018 11:03:10 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் காலா. இப்படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், நீண்ட நாட்களாக படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 27ம் தேதி உறுதியாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நடைபெற்றுவரும் திரையுலகின் வேலை நிறுத்தம் காரணமாக பல படங்கள் வெளியாகாமல் வரிசையில் இருப்பதால், அப்படங்கள் வெளியான பின்பே காலா வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் காலா படம் ஜூன் மாதம் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. திரைப்பட துறையினரின் வேலை நிறுத்தம் என்பதை தாண்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக ரஜினி வெளியிட்ட அறிக்கையால் ரஜினிக்கு எதிரான மனநிலை நிலவுவதால் படத்தை இரண்டு மாதம் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
  • Share
  • 0 Comment(s)