எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்த கீர்த்தி சுரேஷ்
Posted: Tue,17 Apr 2018 10:57:36 GMT
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தயாராகிவரும் இப்படத்தில் சாவித்திரி பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
நடிப்புக்கு பெயர்பெற்றவரான சாவித்திரியின் பாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியாக இருக்க மாட்டார் என்றும், வேறு ஒரு நல்ல நடிகையை நடிக்க வைத்திருக்கலாம் என்றும் பல்வேறு முனுமுனுப்புகள் வந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தின் குறுமுன்னோட்டம் அனைவரின் வாயையும் அடைத்துள்ளது.
முன்னோட்டத்திலேயே சாவித்திரி பாத்திரத்துக்கு தான் மட்டுமே மிகச்சரியான தேர்வு என்று நிரூபித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பு குறித்து ஆட்சேபம் தெரிவித்து வந்தவர்களையே அவர்கள் வாயால் பாராட்ட வைத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)