சமந்தாவுக்கு கணவர் கற்றுக்கொடுத்த மந்திரம்
Posted: Mon,16 Apr 2018 03:09:50 GMT
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணமான நிலையில், திருமணத்துக்குப்பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருகும் படம் ரங்கஸ்தலம்.
இப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்று 150 கோடிகளுகு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிகள் குறித்து கூறியிருக்கும் சமந்தா, “ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். ரசிகர்களின் தீர்ப்பு நம் கையில் இல்லை என்று என் கணவர் நாக சைதன்யா கூறியதை பின்பற்றுகிறேன்.
வேலை குறித்து கணவருடன் பேசுவது இல்லை. என் பட ஸ்க்ரிப்ட் குறித்து அவரிடம் பேச மாட்டேன். வேலையையும், குடும்பத்தையும் மிக்ஸ் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)