இளைஞர்களுக்கு ஜேசுதாஸ் அறிவுரை
Posted: Mon,16 Apr 2018 03:08:36 GMT
சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் பின்னணி பாடகர் ஜேசுதாஸுக்கு சிறந்த பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு 8வது தேசிய விருதாகும்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தெரிவித்திருக்கும் அவர், “அன்று காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னா.ன்
ஸ்ருதி சுத்தமாக இருந்தால் பணமும், புகழும் தானாக வரும். அதை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. சங்கீதம் பெரிய வரம். அது கிடைத்தால் வாழ்க்கையில் வேறு எதுவுமே தேவையில்லை. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் எனக்கு எதுவுமே தெரியாது இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதி தினமும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறைய கிடைக்கும். இன்றைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன் நேரத்தை வீணாக்காதீர்கள். பயனுள்ள வழியில் அதனை செலவு செய்யுங்கள் உங்களுக்கு எல்லாம் வந்து சேரும். விருது கொடுப்பவர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றிகள் கோடிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)