இந்த ஆண்டு மழை சிறப்பாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Posted: Mon,16 Apr 2018 02:56:06 GMT
கடந்த ஆண்டு வழக்கமான மழையில் 95 சதவீதம் பெய்த நிலையில், இந்த ஆண்டும் மழை பொய்க்காமல் 97 சதவீதம் அழவுக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்திருக்கும் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் தலைவர் கே.ஜே. ரமேஷ், ”ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும், 2018-ம் ஆண்டு பருவமழை நீண்டகால சராசரியில் 97 சதவீதம் இயல்பானதாகவே இருக்கும். கடந்த ஆண்டு 95 சதவீதம் இயல்பான மழை இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைக்காட்டிலும் கூடுதலாக 2 சதவீதம் இயல்பு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு பற்றாக்குறை மழை பெய்ய வாய்ப்பு கிடையாது. இயல்பான மழை 42 சதவீதம் பெய்வதற்கு சாத்தியமுள்ளது, 12 சதவீதம் இயல்புக்கும் அதிகமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு பருவமழை இயல்பான நிலையில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.
பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து மே மாதத்தில் 15-க்குப் பின் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். வழக்கமாக மே இறுதிவாரம், அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இந்த ஆண்டும் அதையொட்டித்தான் இருக்கும் என நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)