பங்கு முதலீட்டார்கள் மகிழ்ச்சி
Posted: Mon,16 Apr 2018 02:51:18 GMT
இன்றைய பங்கு சந்தைகள் தொடங்கும் போதே ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பங்கு சந்தை, வர்த்தகத்தின் வார முதல் நாளான இன்று உயர்வுடன் தொடங்கியது. முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட உயர்வு, ஆசிய பங்குச்சந்தைகளின் எழுச்சி உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வை சந்தித்தது.
இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.78 புள்ளிகள் உயர்ந்து 34,305.43-ஆகவும், நிப்டி 47.75 புள்ளிகள் உயர்ந்து 10,528.35-ஆகவும் முடிந்தன.
  • Share
  • 0 Comment(s)