Posted: Mon,16 Apr 2018 02:43:38 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழர் அமைப்புகள் போராடிய நிலையில், அதை ஒடுக்கும் வகையில் சில நாட்கள் முன்பு கடுமையான அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டிருந்தார். அப்போதே ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாரதிராஜா, இன்று மீண்டும் ரஜினியின் போக்கு குறித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாஅர்.
அந்த அறிக்கையில், “தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என்பது இப்போதுதான் தெரிகிறது. இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.
காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.
பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கு சேர்த்துதான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன். தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this