நம்பிக்கையை ஏற்படுத்தும் ’டூ லெட்’
Posted: Mon,16 Apr 2018 01:04:42 GMT
தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது ’டூ லெட்’ படம். இது குறித்து தெரிவித்திருக்கும் டூ லெட் பத்தின் இயக்குனர் செழியன், “ஒவ்வொரு முறை வீடு காலி செய்யும்போதும் நிறைய அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஒரு வீட்டை காலி செய்து, இன்னொரு வீட்டுக்கு குடிபோவது சாமானியம் அல்ல.
எந்த மதம், எந்த சாதி, எவ்வளவு வருமானம், என்ன தொழில் என்பதை எல்லாம் மறைமுகமாக கேட்டு தெரிந்துகொள்ள அவர்கள் நடத்தும் நேர்காணல் என்பதே பெரிய கதை. இதை ஏன் படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் ‘டூ லெட்’ திரைப்படம்.
எந்தவித பிரம்மாண்ட பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட படத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 நண்பர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு சிறுபத்திரிகை நடத்துவதுபோல நாலைந்து பேர் சேர்ந்து எளிமையாக ஒரு படத்தை எடுக்கலாம். அவ்வாறு கூட்டாஞ்சோறு போல எடுக்கப்பட்ட படம்தான் இது. அப்படி எடுத்தால்கூட அங்கீகாரம் பெற முடியும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)