பஜக அரசை தாக்கும் ஜெயக்குமார்
Posted: Mon,16 Apr 2018 01:02:01 GMT
நாள் தோறும் செய்தியாளர்களை சந்திப்பதும், எதிர்கட்சிகளை பற்றி குறைகூறுவதும், அவர்கள் கூறும் குறைகளுக்கு விளக்கம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
அதன்படி செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்புப் பயணம் என்பது முற்றிலும் தோல்வி” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், “ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸ்னரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. காவிரிக்காக என்றென்றும் உரிமையை காக்கும் இயக்கம் அதிமுகதான்” என்றுதெரிவித்த அவர், “மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)