Posted: Mon,16 Apr 2018 12:59:35 GMT
நடைபெற்று வரும் 11வது ஐபிஎல் போடிகளில் லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை பஞ்சாப் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற சென்னை அணித்தலைவர் தோணி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக அடி, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. 198 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே சொதப்பியது.
கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்டது. மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்கிய சென்னை அணித்தலைவர் தோணி, ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளும் அளவுக்கு அதிரடியாக சிஸ்கர் மற்றும் நான்கு ரன்கள் என பறக்கவிட்டார். 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆயினும் நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது சென்னை அணி.
  • 0 Comment(s)
Be the first person to like this