காமன் வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து
Posted: Mon,16 Apr 2018 12:58:23 GMT
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இம்முறை இந்தியாவில் இருந்து 225 வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்தியா சிறப்பாக விளையாடி பதக்கப் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, “காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரின் வெற்றியும், அனைத்து இந்தியர்களையும் பெருமைப்பட வைத்துள்ளது. நமது விளையாட்டு வீரர்கள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர். பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)