Posted: Mon,16 Apr 2018 12:57:35 GMT
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. பூவா தலையா வென்ற பெங்களூர் அணித்தலைவர் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 217 ரன்களை குவித்தது. 20-20 போட்டிகளை பொறுத்தவரை இது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ஆணி ஓரளவு சமாளித்தலும் முடியாமல் மண்ணை கவ்வியது.
பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
  • 0 Comment(s)
Be the first person to like this