கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
Posted: Mon,16 Apr 2018 12:52:01 GMT
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அப்துல் கலாம் நினைவிடத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிலையில், கோவையில் அடுத்த பொதுக்கூட்டம் மே 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கமல்ஹாசன் வரும் மே 11, 12, 13 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். மூன்று நாள் சுற்றுப்பயண முடிவில் 13ம் தேதி கோவையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • Share
  • 0 Comment(s)