அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் வரலட்சுமி
Posted: Mon,16 Apr 2018 04:49:48 GMT
துப்பாக்கி கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக முருகதாஸ் இயகக்த்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்துக்கு தற்காலிகமாக விஜய் 62 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் விவசாயிகளின் பிரச்சினையை பேசுவதாக அமைக்கப்படுள்ளதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரலட்சுமியின் பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அதிரடி அரசியல் வாதியாக மிக கொடூரமான வில்லி பாத்திரத்தில் நடிக்கிறாராம் வரலட்சுமி. இப்படத்தில் ராதாரவி, அரசியல் தலைவர் பழ கருப்பையா ஆகியோரும் அரசியல்வாதி பாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
  • Share
  • 0 Comment(s)