ராணா மகிழ்ச்சி
Posted: Mon,16 Apr 2018 04:46:59 GMT
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 65வது இந்திய தேசிய விருதுகளில் ராணா நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் காஸி அட்டாக் ஆகிய படங்களுக்கு விருது கிடைத்துள்ளது.
தான் நடித்த இரண்டு படங்களுக்கு விருது கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ராணா. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒரே ஆண்டில் நான் நடித்த பாகுபலி, தி காஸி அட்டாக் என இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
காஸி அட்டாக் படம் தெலுங்கு, இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை கொடுத்தது. அதனால் அப்போதே அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதினேன். அது இப்போது நடந்துள்ளது. இதுபோன்ற வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)