பாலு மகேந்திரா நூலகம் தொடக்கம்
Posted: Mon,16 Apr 2018 04:45:18 GMT
மறைந்த இயக்குனர் – ஒளி ஓவியர் பாலு மகேந்திராவின் புத்தக சேகரிப்புகளை வைத்து நூலகம் ஒன்றை அமைத்துள்ளார் இயக்குனர் அஜயன் பாலா.
இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளாராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் பாலு மகேந்திரா. கேமிராவுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் நேசித்தது புத்தகங்களைதான். நல்ல வாசிப்பாளன்தான் நல்ல இயக்குனராக இருக்க முடியும் என்று எப்போதும் சொல்லி வந்தவர். அவர் தன் வாழ் நாள் முழுவதும் ஆயிரக்கணக்காக புத்தகங்களை சேமித்து வைத்திருந்தார்.
அவருடைய புத்தக சேகரிப்புகளை இயக்குனர் அஜயன் பாலா, சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் என்ற பெயரில் தொகுத்து நூலகமாக்கியுள்ளர். இந்ந நூலகத்தின் தொடக்க நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் , சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் கலண்டு கொண்டனர்.
  • Share
  • 0 Comment(s)