சல்மான்கான் படத்தில் நடிக்கும் தமிழ் நடிகர்
Posted: Mon,16 Apr 2018 04:09:19 GMT
தமிழ் திரையுலகில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த பிரபுதேவா, இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.
இந்நிலையில் மீண்டும் சல்மான் கான் நடிப்பில் தயாராகும் டபாங் 3 படத்தை இயக்க பால்வுட்டுக்கு செல்கிறார். இந்தியில் தயாராகும் டபாங் 3 படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியிடும் திட்டம் வைத்துள்ளார்.
இப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவை தேர்ந்தெடுத்துள்ளார். இப்படம் மூலம் பால்வுட்டில் அறிமுகமாகிறார் ஜெகபதி பாபு. அதே போல் தமிழ் திரையுலக சேர்ந்த ஒரு நடிகரையும் முக்கிய பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம், அது அனேகமாக நாசராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)